லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் இந்த வார இறுதிக்குள் தாக்குதல் நடத்துவோம் என ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தனது டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் முன்னணி அரசு சார்பற்ற பயங்கரவாத அமைப்பு தங்களது வலைதள அமைப்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையில், யூலை 4 ஆம் திகதிக்குள் லாஸ் ஏஞ்சல்ஸ், ஹீத்ரூ விமான நிலையம் மற்றும் நியூயோர்க்கின் ஜோன் கென்னடி விமான நிலையங்களில் தாக்குதல் நடத்துவோம்.
யூலை 4 ஆம் திகதி அமெரிக்காவின் சுதந்திர தினமாகும், மேலும் இந்த நாள் 13 பிரித்தானிய காலணிகள் 1776 ஆம் ஆண்டு ஒன்றிணைந்த நாள் ஆகும்.
டுவிட்டரில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட 3 நாட்களுக்கு பின்னர், இஸ்தான்புல் அடாடர்க் விமான நிலையத்தில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்தான்புல் விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள்.
இந்த தாக்குதலில், மூன்று வெளிநாட்டவர்கள் உள்பட ஐ.எஸ் ஆதரவாளர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இஸ்தான்புல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் வெளிநாட்டவர்களே என்றும் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்திய மூன்று பயங்கரவாதிகள் ரஷ்யா, உஸ்பெகிஸ்தான் மற்றும் கிரிகிஸ்தான் நாட்டவர்கள் என்று துருக்கி அரசு தெரிவித்துள்ளது.