பிரதமர் பதவியை ராஜினாமா செய்த கமெரூன் இனி என்ன வேலை செய்யலாம்?

Report Print Peterson Peterson in பிரித்தானியா
பிரதமர் பதவியை ராஜினாமா செய்த கமெரூன் இனி என்ன வேலை செய்யலாம்?
1496Shares

பிரித்தானிய பிரதமரான டேவிட் கமெரூன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அடுத்தாக அவர் என்ன வேலையில் ஈடுபடலாம் என இணையத்தளவாசிகள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதை தொடர்ந்து பிரதமரான கமெரூன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

எதிர்வரும் அக்டோபர் மாதம் பிரதமர் அலுவலக பணிகளிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலக உள்ளதாக இன்று காலை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து, கமெரூன் அடுத்து என்ன வேலையில் ஈடுபடுவார் என இணையத்தளவாசிகள் பரபரப்பான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

எனினும், பெரும்பாலானவர்கள் வெளியிட்டு கருத்துக்கள் அனைத்தும் ஒரே மாதிரியாகவே இருந்துள்ளன.

அதாவது, பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ள கமெரூன் இனி ‘பன்றிகளை வளர்க்கும் பண்ணையை தொடங்கலாம்’(Pig farmer) என கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்தாண்டு மே மாதம் வெளியான ஒரு தகவலில், ’பிரதமர் தன்னுடைய கல்லூரி நாட்களில் உயிரிழந்த பன்றியின் தலையுடன் உடலுறவில் ஈடுப்பட்டார்’ என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து இணையத்தளவாசிகள் இப்பணியை சுட்டிக்காட்டிவருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments