ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற அந்நாட்டு பொதுமக்கள் வாக்களித்துள்ள நிலையில், இந்த நிலைப்பாட்டு எந்தளவிற்கு பிரித்தானியாவில் விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தொடர்பாக அந்நாட்டு எம்.பிக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தற்போது வெளியான இறுதி முடிவுகளின்படி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற 17,410,742(51.9%) வாக்காளர்களும், நீடிப்பதற்கு 16,141,,241(48.1%) வாக்காளர்களும் வாக்களித்துள்ளனர்.
இதன் மூலம், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது உறுதியாக தெரியவந்துள்ளது.
பொதுமக்களின் இந்த தீர்ப்பு குறித்து அந்நாட்டு எம்.பிக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். லேபர் கட்சி எம்.பியான Emily Thornberry என்பவர் பேசியபோது, பொதுமக்களின் இந்த தீர்ப்பு பிரித்தானியாவின் எதிர்காலத்தை கடுமையானதாக மாற்றியுள்ளது.
இதுபோன்ற ஒரு தீர்ப்பை பொதுமக்கள் ஏன் எடுத்தார்கள் என்பது தனக்கு விளங்கவில்லை என கருத்து தெரிவித்துள்ளார்.
கிரீன் கட்சி எம்.பியான Caroline Lucas என்பவர் பேசியபோது, ‘பிரித்தானியா விலகியது மூலம் ஐரோப்பிய ஒன்றியம் புலம்பெயர்தல் தொடர்பான பெரும் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஸ்கொட்லாந்து முதலமைச்சரான Nicola Sturgeon என்பவர் பேசியபோது, ‘ஸ்கொட்லாந்தில் உள்ள 32 நிர்வாக மையங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நீடிக்க வேண்டும் என வாக்களித்துள்ளதன் மூலம், ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் உணர்த்தியுள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.
Ukip தலைவரான Nigel Farage என்பவர் பேசியபோது, ‘ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகினால், வாரம் ஒன்றிற்கு பிரித்தானியா சுமார் 350 மில்லியன் பவுண்ட் சேமிக்கும் என்றும், இந்த தொகை தேசிய மருத்துவமனைகளுக்கு செலவிடலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பவுண்டின் மதிப்பு பத்து சதவிகிதம் குறைந்துள்ளது.
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா வெளியேறியது: அதிகாரப்பூர்வ அறிவிப்பு