பிரித்தானியாவிற்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது: Nigel Farage பெருமிதம்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
பிரித்தானியாவிற்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது: Nigel Farage பெருமிதம்
1393Shares

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா விலக வேண்டும் என 52 சதவீதம் மக்களும், நீடிக்க வேண்டும் என 48 சதவீதம் மக்களும் வாக்களித்துள்ளனர்.

ஆனால், அதிகமான மக்கள் விலக வேண்டும் என வாக்களித்திருப்பதால், பிரித்தானியா ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது உறுதி என்பது தெள்ளத்தெளிவாகிவிட்டது.

இந்நிலையில், இந்த தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரான Nigel Farage, ஒரு போரில் வெற்றியடைந்து போன்று உள்ளதாக உணர்கிறேன், இந்த வெற்றியானது உண்மையான மக்கள், சாதாரண மக்கள் மற்றும் ஒழுக்கம் நிறைந்த மக்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்.

ஊழல், பொருளாதாரம், அரசியல் பிரச்சனைகள் போன்றவற்றோடு போராடிக்கொண்டிருந்த எங்களுக்கு தற்போது வெற்றி கிடைத்துவிட்டதால், இனி பிரித்தானியா நாடு நேர்மையான பாதையில் பயணிக்கும்.

எவ்வித நாடுகளின் ஆதரவும் இன்றி, தனி நாடாக இருந்து போராடி வெற்றி பெற்றுள்ளோம்.

யூன் 23 ஆம் திகதி தான் பிரித்தானியா வரலாற்றில் சுதந்திரம் கிடைத்த நாளாக கருதுகிறேன் என கூறியுள்ளார்.

பிரித்தானியா ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக வேண்டும் என Nigel Farage பிரசாரம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments