பிரித்தானியா விலக வேண்டும் என்று சொன்ன அந்த 823 பேர் யார்?

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
பிரித்தானியா விலக வேண்டும் என்று சொன்ன அந்த 823 பேர் யார்?
1248Shares

Gibraltar ஒரு பிரிட்டிஷ் வெளிநாட்டு பிரதேசம் ஆகும், ஸ்பெயின் தெற்கு கடற்கரைப்பகுதியில் இருந்த இந்த பகுதி 1713 ஆம் ஆணடு பிரித்தானியோவோடு தங்களை இணைத்துக்கொண்டது.

இங்கு வாழும் பெரும்பான்மையான மக்கள் பிரித்தானிய குடியுரிமை பெற்றவர்கள் ஆவார், இப்பகுதியில் மொத்தம் 30,000 மக்கள் வசிக்கின்றனர்.

இவர்கள் அனைவரும் பிரித்தானியா ஐரோப்பிய யூனியனில் நீடிக்க வேண்டும் என்பதே ஆசையாக இருந்துள்ளது, இதற்கு 84 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்தனர்.

தற்போது, நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் தொடர்பான வாக்கெடுப்பில் 19,322 பேர் பிரித்தானியா நீடிக்க வேண்டும் என்றும், 823 பேர் விலக வேண்டும் எனவும் வாக்களித்துள்ளனர்.

ஆனால், அதிகமான மக்கள் ஆதரவாக வாக்களித்திருந்தபோதும், இந்த 823 பேர் என்ன காரணத்துக்காக இவ்வாறு செய்தார்கள் என்பது தொடர்பான குழப்பம் நீடித்து வருகிறது.

வாக்கெடுப்பில், Gibraltar பகுதியின் பங்கு என்ன என்பது தொடர்பான விவாதங்கள் தற்போது டுவிட்டரில் வைரலாக பரவி வருகிறது, வாக்கெடுப்பு தொடர்பாக சுமார் 40,000 டுவிட்டுகள் பதிவிடப்பட்டுள்ளன.

அதிலும், குறிப்பாக அந்த 823 பேரும் டுவிட்டரில் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments