துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த பிரித்தானிய பெண் எம்.பி!

Report Print Peterson Peterson in பிரித்தானியா
துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த பிரித்தானிய பெண் எம்.பி!
1239Shares

பிரித்தானிய பெண் எம்.பி மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழிலாளர் கட்சி எம்.பியான Jo Cox என்பவர் West Yorkshireல் உள்ள Birstall என்ற நகரில் மர்ம நபரால் தாக்குதலுக்கு உள்ளானார்.

அந்த நபர் எம்.பியை முதலில் துப்பாக்கியால் சுட்டதாகவும், பின்னர் கத்தியால் குத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் நிகழ்ந்த சில நிமிடங்களில் ஹெலிகொப்டர் மூலம் தூக்கிச் செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அபாய கட்டத்தில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை மற்றும் பொலிஸ் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இரு நபர்களுக்கு இடையே எழுந்த பிரச்சனையை தடுக்க எம்.பி சென்றபோது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் 52 வயதான நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

எம்.பி மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பிரதமர் டேவிட் கமெரூன் மற்றும் தொழிலாளர் கட்சி தலைவரான ஜெரூமி கொர்பைன் ஆகியவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments