பிரித்தானியா முழுவதும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்வுகள்

Report Print Theenan Theenan in பிரித்தானியா
266Shares
266Shares
ibctamil.com

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டும், சமூக நலன் அமைச்சின் பேராதரவில் மாபெரும் சிரமதான பணியும் கடந்த 11.05.2018 தொடக்கம் 13.05.2018 வரை வெற்றிகரமாக பிரித்தானியாவின் பல பாகங்களிலும் முன்னெடுக்கப்பட்டன.

இதேவேளை, 9ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் துக்கதினத்தை முன்னிட்டு எதிர்வரும் மே 18 வரை பிரித்தானியா முழுவதும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், வலி சுமந்த இந்த மே மாதத்தில் ஈழத்தில் தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கேட்டு ஈருளிப் பயணமும் எமக்காக குருதி சிந்தியவர்களுக்காக குருதி கொடையும் மே 18 வரை இடம்பெறவுள்ளன.

அந்த வகையில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மெ மற்றும் சேர்.அட்டன்பரொ ஒப்புதலுடன் பிரித்தானியாவின் புகழ் வாய்ந்த தினசரி பத்திரிகையான டெய்லி மெயில் "Great Britain Plastic Pic Day" எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்வை பிரித்தானியா முழுவதும் மே 11-13 வரை ஆரம்பித்து வைத்தமை யாவரும் அறிந்ததே!

இந்த மாபெரும் சிரமதானப் பணியில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்து கொண்டது. பிரித்தானிய மக்களிடையே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சேவையினையும், நன்மதிப்பினையும் கொண்டு செல்வதற்கான ஒரு அரிய சந்தர்ப்பமாகவும் இந்த செயற்பாடு அமைந்திருந்தது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் "விளையாட்டும் சமூக நலமும்" அமைச்சின் பிரதியமைச்சர் சொ.யோகலிங்கம் தலைமையில் இந்த சிரமதான பணிக்கான திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அந்த வகையில் சிரமதான பணிகளை செவ்வனே செய்வதற்கு பிரதான ஒருங்கிணைப்பாளராக ரமேஷ்குமார் சோமசுந்தரமும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக உமாகாந்த், பிரேமகாந்த், ஹோல்டன் நிமால், சுரேஷ் மற்றும் இலண்டனின் பல பகுதிகளுக்கான ஒருங்கிணைப்பாளர்களும் தெரிவு செய்யப்பட்டு சிரமாதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் பங்கெடுத்த அனைத்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களுக்கும் விளையாட்டுத்துறை மற்றும் சமூக நலமும் அமைச்சின் பிரதியமைச்சர் சொ.யோகலிங்கம் ஆக்கமும் ஊக்கமும் தந்ததுடன் அவர்களுக்கு பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்திருந்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்