பிரித்தானியாவில் ஏற்பட்ட விபரீதம்! பவுண்டின் பெறுமதியில் மாற்றம்

Report Print Vethu Vethu in பிரித்தானியா

அமெரிக்க டொலர் மற்றும் யூரோவிற்கு எதிராக ஸ்ரேலிங் பவுண்ட் கடும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவின் பொருளாதாரம் முதல் காலாண்டில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி அடைந்துள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

டொலருக்கு எதிராக 1.04 வீத வீழ்ச்சியையும், யூரோவுக்கு எதிராக 0.9 வீத வீழ்ச்சியையும் ஸ்ரேலிங் பவுண்ட் பதிவு செய்துள்ளது.

எனினும், ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் பிரித்தானியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.1 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த காலங்களில் பிரித்தானியாவில் பனிப்பொழிவு காரணமாக மிகப்பெரிய பகுதி பாதிப்படைந்திருந்தது.

இதனால் பிரித்தானியாவின் சுற்றுலா துறை மற்றும் கட்டுமான பணி நிறுத்தப்பட்டமை பவுண்ட் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் எதிர்பார்த்ததனை விடவும் மோசமான பொருளாதாரம் பிரச்சினைகளை சீரற்ற காலநிலை ஏற்படுத்தியதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் பிரித்தானிய வங்கி அடுத்த மாதம் வட்டி வீதங்களை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்