பிரித்தானியாவில் பொருளாதார வீழ்ச்சி: வட்டி விகிதங்களை உயர்த்த கரிசனை

Report Print Thayalan Thayalan in பிரித்தானியா
பிரித்தானியாவில் பொருளாதார வீழ்ச்சி: வட்டி விகிதங்களை உயர்த்த கரிசனை

இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் பிரித்தானியாவின் பொருளாதாரத்தில் வீழ்ச்சி காணப்பட்டதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடுமையான பனிப்பொழிவே இதற்குக் காரணமெனவும், அந்த ஊடகங்கள் கூறியுள்ளன.

எனினும், பிரித்தானியாவில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமைக்கு சீரற்ற காலநிலையை மாத்திரம் குறை கூற முடியாதென, தேசிய புள்ளிவிவரவியல் திணைக்களம் கூறியுள்ளது.

பிரித்தானியாவில் கடந்த ஜனவரியில் கட்டுமானப் பற்றாக்குறை காணப்பட்டதாகவும், இதுவும் ஒரு காரணமாக இருக்கலாமெனவும், அத்திணைக்களம் கூறியுள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்திலுள்ள வங்கியொன்று எதிர்வரும் மே மாதத்தில் வட்டி விகிதங்களை உயர்த்துவது தொடர்பாகக் கவனஞ்செலுத்தி வருவதாகவும், தெரியவருகின்றது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்