1000 ஆண்டுகளாக மிதக்கும் அழகிய நகரம் வெனிஸ்

Report Print Fathima Fathima in சுற்றுலா

மேற்கத்திய நாட்டில் உள்ள ஒரு நகரம் எப்போதுமே தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருப்பதை என்னெவென்று சொல்வது.?

அந்த நாடு இத்தாலியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ‘வெனிஸ்’ நகரமாகும்.

சுமார் ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக இந்த நகரம் நீரில் மிதந்து கொண்டுள்ளது. சாலைப் போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து ஆகியவற்றின் மூலம் உலக நாடுகளுடனும் தொடர்பு கொண்டிருக்கிறது.

‘ஏட்ரியாட்டிக்’ கடலின் (Adriatic Sea) வடமேற்கு முனையில் உள்ள கடற்கழியின் மத்தியில் வெனிஸ் நகரம் அமைந்துள்ளது. அந்த கடற்கழியானது சுற்றியுள்ள கடல் பகுதியில் வந்து சேரும் நதிகளால் உருவான வண்டல் மண் படிவுகள், கடல் நீரேற்ற அலைகள் மற்றும் நீரோட்டம் ஆகியவற்றால் உருவான மணல் திட்டுகள் ஆகியவற்றால் உருவானதாகும்.

அவை, கிட்டத்தட்ட 50 கிலோ மீட்டர் நீளம் மற்றும் 15 கிலோ மீட்டர் அகலம் கொண்டதாக உள்ளன.

வெனிஸ் நகரத்தில் ஆறு மாவட்டங்கள் உள்ளன. அவை அனைத்துமே கிட்டத்தட்ட 400 பாலங்கள் வழியாகவும், 150க்கும் மேற்பட்ட வாய்க்கால்கள் வழியாகவும் நகரத்தை ஒன்றிணைக்கின்றன.

கடலில் மிதந்து கொண்டுள்ள 117 தீவுகளில் வெனிஸ் நகரத் தீவு மையத்தில் அமைந்துள்ளது. உலக அளவில் தண்ணீருக்குள் கட்டப்பட்ட ஒரே தீவு நகரம் வெனிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுற்றுலா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்