பிரமிக்க வைக்கும் வால்பாறையைப் பற்றி தெரியுமா?

Report Print Gokulan Gokulan in சுற்றுலா

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஆனைமலை மலைத்தொடரில் கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் அமைந்துள்ளது வால்பாறை மலைத்தொடர்.

இது தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பொள்ளாச்சிக்கு 65 கி.மீ தூரத்திலும் கோயம்புத்தூரிலிருந்து 102 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.

ஆசியாவிலேயே இரண்டாவது ஆழமான அணை. வால்பாறையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

அழகிய நீராறு அணை, சின்னக்கல்லார் அணை, அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி, புல்மலை, குரங்கு அருவி போன்ற வால்பாறையைச் சுற்றிலும் 8 அணைகள் உள்ளன.

குரங்கு அருவியில் குளிக்கும் காட்சியை காண ஒவ்வோராண்டும் பல ஆயிரம் பேர் இங்கு வந்து செல்கின்றனர்.

இங்கு வருபவர்கள் குறைவாக இருப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு எதுவும் இல்லை.

வால்ப்பாறையில் மலைகளுக்கு பின்னால் மறையும் சூரியனின் அழகு என்ன அழகாக உள்ளது தெரியுமா. வால்ப்பாறையில் அதிகமாக மங்கூஸ்கள் உள்ளன. வால்ப்பாறையை சுற்றி பசுமையான விவசாய நிலம் பார்ப்பதற்கு பிரம்மியமாக காட்சி அளிக்கிறது.

'தென்னிந்தியாவின் சீராப்புஞ்சி' என்று வால்ப்பாறை மலைப்பிரதேசம் அழைக்கப்படுகிறது.

இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு பகுதியான சின்னக்கல்லாரை உதாரணமாக சொல்லலாம். இவ்விடத்தில் தோட்டங்களுக்கும், தேனீர் தொழிற்சாலைகளுக்கும் பெயர்பெற்றது.

வால்ப்பாறையிலிருந்து 38 கி.மீ தூரத்திலும் ஆழியார் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 1959 மற்றும் 1969-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் கட்டப்பட்டது. சினிமாக்காரர்கள் இந்த இடத்தில்தான் அடிக்கடி ஷூட் செய்வார்கள்.

இங்கு சிறுத்தைகள், மான்கள், புலிகள், யானைகள், புனுகுப் பூனைகள், காட்டெருதுகள், கரடிகள், தேவாங்குகள், முள்ளம்பன்றிகள், ஓநாய்கள், எறும்புத்திண்ணிகள் உள்ளிட்ட அரியவகை விலங்குகள் இருக்கின்ற.

அதுமட்டுமல்லாமல் சிவப்பு மரப் பறவை, புள்ளிப் புறா, மீசையுடன் கூடிய புல்புல், கறுப்புத் தலை ஓரியோல் போன்ற பறவைகளையும் நீங்கள் கண்டு மகிழலாம். இப்பூங்காவினுள் அமைந்துள்ள அமராவதி ஏரியில் எண்ணற்ற முதலைகள் காணப்படுகின்றன.

ஆனைமலை வனவிலங்கு சரணாலயதின் ஒரு பகுதியாக புல் குன்று அமைந்துள்ளது. இங்கு தாவரங்களையும், விலங்குகளையும் கண்டு ரசிக்க முடியும். ஆனால் இங்கு செல்வதற்கு நீங்கள் வனவிலங்குத் துறை பாதுகாவலரிடம் அனுமதி பெறவேண்டும். இப்புல் குன்றினை ஜனவரி முதல் மே மாதம் வரைதான் பார்வையிட முடியும்.

சோலையார் அணை ஆசியாவிலேயே 2-வது ஆழமான அணையாக கருதப்படுகிறது. இந்த அணையின் பிரம்மாண்டமான தோற்றமும், பீரிட்டு வரும் நீரும் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இந்த இடம் மிகவும் அமைதியாக இருப்பதால் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோர் இங்கு வருகிறார்கள்.

மேலும் சுற்றுலா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...