புறாமலையில் மறைந்துள்ள வியப்புகள்! படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

Report Print Kavitha in சுற்றுலா

தென் ஆசியாவின் அழகிய தீவாக அமைந்துள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு தனிச்சிறப்புண்டு.

சுற்றுலா பயணிகளை கவர்ந்த பல இடங்களில் ஒன்று தான் திருகோணமலையிலுள்ள நிலாவெளி கடற்கரை.

திருகோணமலை நகரில் இருந்து சுமார் 20 கிலோமீற்றர் தொலைவில் இது அமையப்பெற்றுள்ளது.

நிலாவெளிக் கடற்கரைக்கு மேலும் அழகூட்டுவது புறாமலை, இப்பொழுது இவ்விடம் தேசிய விலங்கு சரணாலயமாக மாற்றப்பட்டுள்ளது, படகு போக்குவரத்தும் நடாத்துகின்றார்கள்.

மலையைச் சுற்றி ஆழம் குறைந்த கடல், அழகிய முருகை கற்களோடு கூடியது மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கிறது.

இங்கு 100 வகையான பவளப் பாறைகளும் முன்னூறு வகையான பவள பாறை மீன்கள் இருப்பதாக மக்கள் கூறுகின்றார்கள்.

புறாத்தீவு தேசியப் பூங்கா, இலங்கையில் 17வது தேசியப் பூங்காவாகும்.

புறாத்தீவு 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட இடங்களில் சிலவற்றில் ஒன்றாகும்.

புறாமலையில் உள்ள கடல் நீரானது கண்ணாடி போன்று தெளிவாக காட்சியளிப்பதுடன் சுழியோடும் அளவுக்கு அங்கு பாதுகாப்பான ஏற்பாடுகளும் அமையப்பெற்றுள்ளன.

இது வனஜீவராசிகள் திணைக்களத்தின் பாதுகாப்புகள் உட்பட இலங்கை கடற்படையும் அங்கு இதனை பாதுகாத்து வருகிறது.

நாளாந்தம் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றமையும் வெளிநாட்டு உள்நாட்டுப் பயணிகள் வருகை தருகின்றனர்.

புறா மலையில் உள்ள ஏதாவது பொருட்களையோ கடற்பாசி சிற்பிகளையோ கடல் தாவர இனங்களையோ தம்வசம் வைத்துக்கொள்ளவோ அங்கிருந்து கொண்டுவர முடியாது.

மேலும் சுற்றுலா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...