இலங்கையின் அழகை ரசிக்க வந்த வெளிநாட்டவர்களின் பட்டியல்

Report Print Fathima Fathima in சுற்றுலா

இலங்கைக்கு கடந்த 10 மாதங்களில் சுற்றுலா வந்த வெளிநாட்டவர்கள் தொடர்பில் இலங்கை சுற்றுலாத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2017ம் ஆண்டு 1.3 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது 150,419 பேர் உலகெங்கும் பல்வேறு நாடுகளிலிருந்து வருகை தந்துள்ளனர், இவர்களில் இந்தியா மற்றும் சீனா நாட்டவர்கள் அதிகம்.

இந்தியாவிலிருந்து அக்டோபரில் மட்டும் 36,996 பேர் வருகை தந்துள்ளனர், கடந்த 10 மாதங்களில் 304,597 பேர் வந்துள்ளனர்.

சீனாவை பொறுத்த வரையில் அக்டோபர் மாதத்தில் 21,846 பேரும், கடந்த 10 மாதங்களில் 230,481 பேரும் வந்துள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து 10.5 சதவிகிதம் பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 8.6 சதவிகிதம் பேரும் வந்துள்ளனர்.

கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த 10 மாதங்களில் மட்டும் 2.7 சதவிகிதம் அதிகமாக காணப்படுகிறது.

மேலும் சுற்றுலா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்