நம்பிக்கை இல்லாமல் சென்றால் இறந்துவிடுவார்கள்: கைலாச மலையைப் பற்றிய அரிய தகவல்கள்

Report Print Kabilan in சுற்றுலா
319Shares

இந்தியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கைலாச மலையைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அங்குள்ள ரகசியங்கள் பற்றி பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.

இமயமலையில் அமைந்திருக்கும் கைலாச மலையானது, புராணங்களில் கூறப்படுவது போல சிவபெருமானின் இருப்பிடமாக அறியப்படுகிறது. இதனை கண்ணுக்கு புலப்படும் ஒரே தேவலோகம் என அழைக்கின்றனர்.

கடவுள்களில் பிரம்மாவிற்கு சத்யலோகம், திருமாலுக்கு வைகுண்டம் மற்றும் சிவனுக்கு கைலாயம் என ஆன்மீக கதைகளில் கூறப்படுவதுண்டு. ஆனால், இம்மூன்று லோகங்களிலும் கைலாசம் மட்டுமே கண்ணுக்கு தெரியும் எனவும் கூறப்படுகிறது.

கெலாசா எனும் சமஸ்கிருத வார்த்தையில் இருந்து கைலாசம் என்னும் வார்த்தை உருவானது. இதற்கு படிககற்கள் என்று பொருள். பார்ப்பதற்கும் படிககற்கள் போலவே இருக்கும், இந்த மலையின் மீது சூரிய ஒளி படும்போது ஜொலிக்கும்.

சுமார் 6638 மீட்டர் உயரமும், 52 கிலோ மீட்டர் சுற்றளவும் கொண்ட கைலாச மலை இந்திய மற்றும் திபெத்திய எல்லையில் அமைந்துள்ளது. சிந்து, சட்லெஜ் மற்றும் பிரம்மபுத்திரா என்னும் புகழ்பெற்ற ஆறுகள் இங்கு தான் உற்பத்தியாகிறது.

சிறந்த சுற்றுலாத் தளமாக கூறப்படும். அதே வேளையில் இந்தியாவின் மிகவும் ஆபத்தான சுற்றுலாத் தளம் எனவும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு மதத்தின் அடிப்படையிலும் இங்கு கடவுள்கள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக இந்து மதப்படி, சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியும் இங்கு தான் வாழ்ந்ததாகவும், அவர் மனைவியுடன் தியானம் மேற்கொள்ளும்போது அமைதி நிலவும் எனவும் அங்கு சென்று திரும்பிய பக்தர்கள் கூறியுள்ளனர்.

இங்கு உள்ள ஒரே நன்னீர் ஏரியான மானசரோவர் தான் உலகின் மிக உயரத்தில் இருக்கும் ஏரி ஆகும். இந்த ஏரியில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் தான் கைலாசம் உள்ளது.

பாலையும், நீரையும் தனித்தனியே பிரித்து வைக்கும் அன்னப்பறவைகள் இங்கு வாழ்ந்ததாகவும் கருத்து நிலவுகிறது. இந்த மலையில் பல மர்மங்களும் உள்ளன.

தெய்வ நம்பிக்கை இல்லாமல் இங்கு சிவபெருமான் குறித்த உண்மைகளை கண்டறிய செல்பவர்கள் இறப்பதாகவும், பக்தியுடன் செல்பவர்களுக்கு மட்டுமே சிவன் காட்சியளிப்பார் எனவும் கூறப்படுகிறது.

மேலும், 8000 மீட்டருக்கும் உயரமான மலைகளில் கூட ஏறி பலர் சாதனை படைக்கும் போது, வெறும் 6000 மீட்டர் உயரம் மட்டுமே கொண்ட இந்த மலையில் ஏன் யாரும் ஏற முயலவில்லை என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

மானசரோவருக்கு அருகேயே ராட்சத தளம் என்னும் உப்புத்தன்மை கொண்ட ஏரி உள்ளது. இது ராவணன் தவம் செய்ததாலேயே உப்புத்தன்மை கொண்டதாக மாறியதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும், இந்திய அரசே கைலாச மலைக்கு பொதுமக்கள் செல்வதற்கான ஏற்பாடுகளை கோடை காலங்களில் செய்து தருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுற்றுலா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்