குளிரிலும் வியர்க்கும் சிலை: எங்குள்ளது தெரியுமா?

Report Print Printha in சுற்றுலா
45Shares

இந்தியா மட்டுமின்றி உலகின் பணக்கார தெய்வமாக கருதப்படும் திருப்பதி ஏழுமலை ஆண்டவர் குறித்த சில மர்மங்களை காணலாம்.

திருப்பதி ஏழுமலையான் சிலை 250 கோடி வருடம் வயதான சிலாதோரணம் என்ற அபூர்வ பாறையால் உருவானது.

3,000 அடி உயரத்தில் உள்ள குளிர் நிறைந்த ஆந்திர பிரதேசத்தில் இந்த திருப்பதி அமைந்துள்ளது.

இந்த ஏழுமலையான் சிலையில் வியர்வை வெளிப்படுபடுமாம். அதிலும் இன்னொரு ஆச்சர்ய மர்மம் என்னவென்றால், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்ட ஏழுமலையான் சிலை அரை மணிநேரத்தில் வியர்த்து ஊத்துமாம்.

அதுவும் இந்த சிலை 20 டிகிரி அளவு குளிரிலும் சிலை வியர்க்குமாம். மூன்றாவது கண் பொதுவாக சிவன் தான் மூன்றாவது கண்ணை கோபத்துடன் திறப்பார் என்பார்கள்.

ஆனால் இத்தலத்தில் ஏழுமலையான் மூன்றாவது கண் திறப்பதாக கருதப்படுகிறது.

பச்சைக் கற்பூரத்தை கருங்கல்லிலோ அல்லது கல்லால் ஆன சிலைகளிலோ பூசினால் அந்த கற்கள் உடனே சேதமடைந்துவிடுமாம்.

ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு நாள் முழுவதும் பச்சை கற்பூரம் சாத்தினாலும் ஒன்றும் ஆவதில்லையாம்.

ஏனெனில் இந்த சிலையில் உள்ள சிற்பியின் உளி படிந்த இடம் சொரசொரப்பு மற்றும் எந்த தடமும் இல்லாமல் அவ்வளவு துல்லியமாக செதுக்கப்பட்டுள்ளதாம்.

மேலும் சுற்றுலா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்