சாரதிகளை இலகுவாக அடையாளம் காண ஊபர் கொண்டுவரும் அதிரடி திட்டம்

Report Print Givitharan Givitharan in போக்குவரத்து

குறுகிய காலத்தில் உலக அளவில் மிகவும் பிரபல்யம் அடைந்த ஒன்லைன் போக்குவரத்து சேவை வழங்கும் நிறுவனமாக ஊபர் வளர்ந்துள்ளது.

கூடவே பல்வேறு பிரச்சினைகளும் ஊபர் வளர்ச்சியுடன் சேர்ந்து வளர்ந்துள்ளது.

கடந்த காலங்களில் பெண் பயணிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது இடம்பெற்று வந்தது.

தற்போது போலி சாரதிகளின் அதிகரிப்பு பிரச்சினையாக மாறியுள்ளது.

எனவே இப் பிரச்சினைக்கு தீர்வாக புதிய திட்டம் ஒன்றினை ஊபர் நிறுவனம் கொண்டுவந்துள்ளது.

இதன்படி ஊபர் பயனருக்கு சாரதியின் லைசென்ஸ் இலக்கம், காரின் மொடல் மற்றும் வடிவமைத்த நிறுவனம் என்பவற்றுடன் சாரதியின் புகைப்படமும் அனுப்பி வைக்கப்படும்.

இவற்றினைக் கொண்டு உண்மையான சாரதியை பயணிகள் இலகுவாக அடையாளம் காண முடியும்.

இத் திட்டம் நேற்றைய தினம் முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் போக்குவரத்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்