பயணிகள் மீதான தொடர் பாலியல் தொல்லை: கேள்விக்குறியாகும் Uber, Lyft போக்குவரத்து சேவை

Report Print Givitharan Givitharan in போக்குவரத்து

ஒன்லைன் ஊடாக டாக்ஸிகளை பதிவு செய்யக்கூடிய விரைவானதும், இலகுவானதுமான பயண சேவையை Uber மற்றும் Lyft நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

உலகின் பல நாடுகளிலும் இச் சேவை வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் குறித்த நிறுவனங்களின் சேவை தொடர்பில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது இதுவரை 103 Uber பயணிகள் சாரதிகளால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று 18 Lyft பயணிகளும் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர்.

இதனால் எதிர்காலத்தில் இவற்றின் சேவைகளை மக்கள் பெறுவதற்கு தயக்கம் காட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த அதிர்ச்சி தகவலை CNN ஊடகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் போக்குவரத்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers