சொக்க வைக்கும் ஏர்பஸ் ஏ380; வாங்க ஒருவாட்டி போயிட்டு வரலாம்!

Report Print Samaran Samaran in போக்குவரத்து

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமாக வலம் வருவது ஏர்பஸ் ஏ380. இதில் பயணிப்பது பலரின் கனவாகவே உள்ளது. அத்தகைய சிறப்பம்சங்கள் கொண்ட ஏர்பஸ் ஏ380 குறித்து இங்கே காணலாம்.

ஏர்பஸ் ஏ380ல் நான்கு இன்ஜின்கள் உள்ளன. இதனால் பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. சில இன்ஜின்கள் செயலிழந்தாலும், விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கி விடலாம். இதுவரை விபத்தில் சிக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மிகச்சிறந்த விமானிகளால் இயக்கப்படுகிறது. பாதுகாப்பான முறையில் அதிநவீன தொழில்நுட்பம், கட்டுப்பாட்டு நுணுக்கங்கள் கொண்டு செயல்படுகிறது. விசாலமான இடத்தில் வீட்டில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகிறது. இதில் ஏறுவதும், இறங்குவதும் மிக அற்புதமான அனுபவமாக இருக்கும்.

இதில் ஏற்படுத்தப்படும் அதிர்வுகளும், ஓசைகளும் மிகவும் குறைவு. மிகச் சிறப்பான காற்று சுத்திரகரிப்பை கொண்டுள்ளது. இருக்கைகள் அனைத்தும் சொகுசாகவும், கூடுதல் சௌகரியம் கொண்டதாகவும் இருக்கிறது. ஒவ்வொரு இருக்கையிலும் பெரிய அளவிலான டிவி திரைகள் இடம்பெற்றுள்ளன.

முன்னாள் இருக்கும் திரையில் விமானத்தைச் சுற்றிலும் காணப்படும் அழகை தெளிவாக கண்டு ரசிக்க முடியும். விமானத்தின் கீழ்த்தளத்தில் 399 பயணிகள் வரை அமர முடியும். இவர்களுக்கு வசதியாக ஏராளமான கழிவறைகள் உள்ளன

பயணிகளின் உடைமைகளை வைப்பதற்கு பெரிய அளவில் இடமுண்டு. இந்த விமானத்தை டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய விமான நிலையங்களில் மட்டுமே தரையிறக்க முடியும்.

மேலும் போக்குவரத்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்