பறக்கும் விமானத்தில் உங்களின் இந்த செயல் சிறை தண்டனை பெற்றுத் தரும் தெரியுமா?

Report Print Arbin Arbin in போக்குவரத்து

பறக்கும் விமானத்தில் மதுபோதையில் தகராறு செய்வது 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையை பெற்றுத் தரும் குற்றமாகும்.

நீண்ட தூர விமான பயணங்களில் பெரும்பாலானோர் மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆனால் இதே செயல் எல்லை மீறும் தருணங்களில் பெரும்சிக்கலில் முடிவடைவதுண்டு.

பெரும்பாலான பிரித்தானிய பயணிகள் ஐரோப்பா செல்லும் பயணங்களில் மது அருந்திவிட்டு கலாட்டவில் ஈடுபடுவது தொடர்கதையாகவே உள்ளது.

இதனால் சில சுற்றுலா தலங்கள் விமானத்தில் மது அருந்தும் பழக்கத்தை தடைவிதிக்க கோரியுள்ளது. மட்டுமின்றி பல விமான சேவை நிறுவனங்களும் மதுவின் அளவை மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது.

இது இப்படி இருக்க, பெரும்பாலான விமான பயணிகளுக்கு மது அருந்தி கலாட்டாவில் ஈடுபடும் பயணிகளுக்கு ஏற்படும் சட்ட சிக்கல் குறித்து தெரிவதில்லை.

விமானத்தில் வழங்கப்படும் மதுவை மட்டுமே அருந்த பயணிகளுக்கு அனுமதி அனுமதியுண்டு, மேலும் விமான நிலையத்தில் இருந்து வாங்கும் மதுவை விமானத்தில் அருந்த அனுமதி இல்லை.

இருப்பினும் பல பயணிகள் ஒளிவு மறைவாக தங்கள் எடுத்துச் செல்லும் மதுவையும் அருந்துவதுண்டு.

இவ்வாறு அதிகமாக மது அருந்திவிட்டு கலாட்டாவில் ஏற்படும் விமான பயணிகளுக்கு சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் சட்ட திட்டத்தின்படி 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனைக்கு வாய்ப்பு உண்டு.

இதே காரணத்திற்காக கடந்த ஆண்டு மட்டும் 387 பயணிகள் கைதாகியுள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

மேலும் ஒருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தால் மேலதிக மது வழங்குவதை மறுக்க விமான ஊழியர்களுக்கு அதிகாரம் உண்டு. மட்டுமின்றி விமான பயணத்தை தொடர அனுமதி மறுக்கவும் ஊழியர்களுக்கு அதிகாரம் உண்டு.

மேலும் போக்குவரத்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்