மாட்டுசாணத்தில் இயங்கும் பேருந்து

Report Print Meenakshi in போக்குவரத்து

இந்தியாவில் முதல்முறையாக மாட்டுசாணத்திலிருந்து கிடைக்கும் இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநில தலைநகரான கொல்கத்தாவில் உள்ள போனிக்ஸ் இந்தியா ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம், அசோக் லேலண்ட் நிறுவனத்துடன் சேர்ந்து மாட்டு சாணத்திலிருந்து பெறப்படும் இயற்கை எரிவாயுவில் இயங்கும் பேருந்தினை உருவாக்கியுள்ளது.

கொல்கத்தாவின் உல்டாடங்கா என்னும் பகுதியிலிருந்து காரியா பகுதி வரை இந்த பேருந்து வெற்றிகரமாக இயக்கப்பட்டது.

இது குறித்து அந்நிறுவன தலைவர் ஜோதி பிரகாஷ் தாஸ், மேற்குவங்காளத்தின் பிர்பும் மாவட்டத்தில் எங்கள் நிறுவனத்தில் இருந்து சான எரிவாயுவை தயாரிக்கிறோம்.

இந்த வாயு ஒரு கிலோ தயாரிக்க எங்களுக்கு ரூ. 20 செலவாகிறது. ஒரு கிலோ எரிவாயு மூலம் 5 கி.மீ. வரை பஸ்ஸை இயக்கலாம்.

கொல்கத்தாவில் டீசலில் 17 கி.மீ.க்கு பஸ்ஸை இயக்க ரூ.12 செலவாகிறது.

நாங்கள் தயாரிக்கும் இந்த எரிவாயு மூலம் பஸ்ஸை 17 கி.மீக்கு இயக்க வெறும் ஒரு ரூபாய் மட்டுமே செலவாகும். குறைந்த செலவில் அதிக மைலேஜினை பெற இயலும் எனக் கூறியுள்ளார்.

மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் 15 பேருந்துகளை இயக்க இருப்பதாகவும், இயற்கை எரிவாயு வர்த்தக ரீதியாக விற்பனை செய்வதற்கு 100 விற்பனை நிலையங்களை அமைக்க அரசிடம் அனுமதி பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அரசு 15 ஆண்டுகளுக்கு முந்தைய வாகனங்களை இயக்க தடை விதித்துள்ளதால் அவற்றில் உள்ள இஞ்சின்களை அகற்றிவிட்டு இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் இஞ்சினை பொருத்தி பயன்படுத்த இயலும்.

இயற்கை எரிவாயு பயன்படுத்தப்படுவதால் மாசுக்கள் ஏற்படாது எனவும் கூறியுள்ளார்.

மேலும் போக்குவரத்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments