சாலையில் செல்போன் யூஸ் பண்றவங்களுக்காகவே சிறப்பு வசதி! எந்த நாட்டில் தெரியுமா?

Report Print Raju Raju in போக்குவரத்து

உலகெங்கிலும் பல கோடி மக்கள் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாகி விட்டார்கள் என கூறினால் அது மிகையாகாது.

முக்கியமாக டிராபிக் நிறைந்த சாலைகளில் வாகனங்களையும், சிக்னலையும் கவனிக்காமல் குனிந்து கொண்டே செல்போனை இயக்குவது பலருக்கு வாடிக்கையாகிவிட்டது.

இவர்களுக்காகவே நெதர்லாந்தின் Bodegraven நகரில் ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதாவது, டிராபிக் சிக்னல் பொதுவாக மேல் நோக்கி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கு அதனுடன் நடைபாதையில் கீழேயும் டிராபிக் சிக்னல் பொருத்தப்பட்டுள்ளது.

பச்சை விளக்கென்றால் போகலாம், சிவப்பு விளக்கென்றால் நிற்க வேண்டும் என்ற வாடிக்கையான முறையிலேயே இது உள்ளது.

இதன் மூலம் செல்போன்களை குனிந்து கொண்டு இயக்குபவர்கள் கீழே உள்ள டிராபிக் சிக்னலை அப்படியே காண முடியும்.

HIG Traffic Systems என்னும் தொழிநுட்ப நிறுவனம் இதை வடிவமைத்துள்ளது.

தற்போது சோதனை முயற்சியில் இருக்கும் இத்திட்டம் விரைவில் பல்வேறு நகரங்களில் செயல்படுத்தப்படவுள்ளது.

இது குறித்து போக்குவரத்து பாதுகாப்பு சங்கம் ஊழியர் Jose de கூறுகையில், இந்த திட்டம் தவறான திட்டம், சாலை விதிகளை மதிக்காமல் செல்போன் பயன்படுத்துபவர்களை ஊக்குவிப்பது போல இது உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் போக்குவரத்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments