புயலால் மூடப்பட்ட விமானநிலையத்தின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியுள்ளன

Report Print Sujitha Sri in போக்குவரத்து

ஓடுபாதையில் நீர் தேங்கியதால் தற்காலிகமாக மூடப்பட்ட சென்னை விமான நிலையம் மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளது.

வர்தா புயல் காரணமாக பெய்த மழையினால் சென்னை விமான நிலைய பகுதிகளில் பலமான காற்று வீசியதுடன் பலத்த மழையினால் ஓடு பாதையில் நீர் தேங்கியது.

இதனால் நேற்று காலை 10 மணி முதல் மறு உத்தரவு வரும் வரையில் சென்னை விமான நிலையத்தின் செயற்பாடுகள் அனைத்தையும் நிறுத்தி வைக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.

தற்போது புயல் வலுவிழந்து சென்னையை கடந்து சென்றுள்ளதால் சென்னை விமான நிலையம் மீண்டும் அதன் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.

மேலும் போக்குவரத்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments