மீண்டும் வழமைக்குத் திரும்பிய ரயில் சேவைகள்

Report Print Thirumal Thirumal in போக்குவரத்து

தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் மூன்று நாட்களுக்கு பின் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக பண்டாரவளை ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

தியத்தலாவ மற்றும் பண்டாரவளை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட ஒபாட எல்ல பகுதியில் 04.12.2019 அன்று இரவு ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிப்படைந்திருந்தன.

பாதிப்பேற்பட்டிருந்த ரயில் பாதையை சீர்செய்யும் பணிகளில் ரயில் நிலைய ஊழியர்களும், தியத்தலாவ இராணுவத்தினரும் ஈடுப்பட்டு வந்தனர்.

இதனையடுத்து, தற்போது ரயில் பாதை சீரமைக்கப்பட்டுள்ளதுடன், ரயில்கள் வழமைப் போன்று சேவையில் ஈடுபடுவதாக பண்டாரவளை ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டது.

எனினும், சீரற்ற காலநிலை தொடர்வதனால் மண்சரிவு அபாயம் இருப்பதாகவும், மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் போக்குவரத்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்