பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தகுதி சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை வெற்றி

Report Print Kavitha in ரெனிஸ்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 27-ந்தேதி பாரீஸ் நகரில் தொடங்கவுள்ளது.

இதையொட்டி இதற்கான தற்போது தகுதி சுற்று நடந்து வருகிறது.

அதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா ஜோவனா ஜோவிச்சை (செர்பியா) எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான நடைபெற்ற இந்த ஆட்டம் 2 மணி 47 நிமிடங்கள் நீடித்து இறுதியாக 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் ஜோவனா ஜோவிச்சை போராடி வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மேலும் இதனை தொடர்ந்தது அங்கிதா அடுத்து ஜப்பானின் குருமி நராவை எதிர் கொள்ளவிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்