இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் புதிய சாதனை

Report Print Kavitha in ரெனிஸ்

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடைபெற்று வருகின்றது.

அதில் ஆண்கள் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச், போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருந்த ஆா்ஜெண்டீனாவின் டியேகோ ஷ்வாா்ட்ஸ்மேனை வீழ்த்தி 5-வது முறையாக இந்த பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் இறுதியில் ஜோகோவிச் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனாா்.

இது ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் மாஸ்டர்ஸ் வகை டென்னிஸ் போட்டியாகும்.

இதன் மூலம் ஆயிரம் தரவரிசை புள்ளி வழங்கும் மாஸ்டர்ஸ் போட்டியில் 2015-க்குப் பிறகு அவா் இந்தப் பட்டத்தை வெல்வது இதுவே முதல்முறை ஆகும்.

அத்துடன் மாஸ்டா்ஸ் பட்டத்தை 36-ஆவது முறையாகப் பெற்றும் ஜோகோவிச் சாதனை படைத்துள்ளாா்.

முன்னதாக ஸ்பெயினின் ரஃபேல் நடால் 35 மாஸ்டா்ஸ் பட்டங்கள் வென்றதே அதிகபட்சமாக இருந்தது. இதனை ஜோகோவிச் தட்டிப்பறித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்