சர்வதேச டென்னிஸில் 100வது பட்டத்தை வென்று சாதனை படைத்த ரோஜர் பெடரர்!

Report Print Kabilan in ரெனிஸ்

சுவிட்சர்லாந்தின் நட்சத்திர டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர், சர்வதேச டென்னிஸில் 100வது பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார்.

ஆடவருக்கான சர்வதேச டென்னிஸ் போட்டி துபாயில் நடந்து வந்தது. நேற்று நடந்த இறுதிப்போட்டியில் ரோஜர் பெடரர்-ஸ்டெபானோஸ் சிட்சிபாஸ் இருவரும் மோதினர்.

விறுவிறுப்பான இந்தப் போட்டியில், சுவிஸின் நட்சத்திர வீரரான பெடரர் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் சிட்சிபாசை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். துபாய் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெடரர் 8வது முறையாக வென்றுள்ளார்.

அவருக்கு ரூ.4 கோடியும், தோல்வியுற்ற சிட்சிபாசுக்கு ரூ.2 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது. தற்போது 7ஆம் நிலை வீரராக இருக்கும் ரோஜர் பெடரர், 22 ஆண்டுகளாக சர்வதேச டென்னிஸில் விளையாடி வருகிறார்.

Getty

இந்நிலையில், நேற்று அவர் கைப்பற்றிய சாம்பியன் பட்டம் சர்வதேச டென்னிஸின் ஒற்றையர் பிரிவில் அவரது 100வது பட்டமாக அமைந்தது. இதில் 20 கிராண்ட்ஸ்லாம் மகுடமும் அடங்கும்.

இதன்மூலம், ‘ஓபன் எரா’ வரலாற்றில் 100 சாம்பியன் பட்டங்களை வென்ற 2வது வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பு அமெரிக்க ஜாம்பவான் வீரர் ஜிம்மி கனோர்ஸ் 109 பட்டங்களை வென்று முதலிடத்தில் உள்ளார்.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்