உலகின் தலைசிறந்த வீரரானார் ஜோகோவிச்

Report Print Fathima Fathima in ரெனிஸ்

உலகின் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை பிரபல டென்னிஸ் வீரரான நோவஸ் ஜோகோவிச்சும், சிறந்த வீராங்கனையாக அமெரிக்காவின் சிமானே பைல்சும் வென்றனர்.

மெனாக்கோவை சேர்ந்த லாரெஸ், ஆண்டுதோறும் சிறந்த பங்களிப்பை அளித்து வரும் வீரர், வீராங்கனைகளுக்கு உலக விளையாட்டு அகாடமி விருது வழங்கி கௌரவித்து வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விருதை டென்னிஸ் வீரரான ஜோகோவிச் தட்டிச் சென்றுள்ளார், சிறந்த வீராங்கனையாக அமெரிக்காவை சேர்ந்த 21 வயதான ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சிமோனே பைல்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் சரிவில் இருந்து மீண்டு வந்த வீரருக்கான விருதை அமெரிக்காவை சேர்ந்த கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் பெற்றுள்ளார்.

திருப்புமுனை ஏற்படுத்திய விருதை ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகாவும், சிறந்த அணிக்கான விருதை பிரான்ஸ் கால்பந்து அணியும் பெற்றுள்ளது.

விளையாட்டுக்கான நல்லெண்ண விருதுக்கு இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த யுவா என்ற தன்னார்வ அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த விழாவில் அனைவருக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...