பிரசவத்திற்கு பின்னர் மீண்டும் சிங்கம் போல் கர்ஜித்த செரீனா வில்லியம்ஸ்

Report Print Deepthi Deepthi in ரெனிஸ்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.

இதில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், லத்வியா வீராங்கனை செவஸ்டோவாவை எதிர்கொண்டார்.

இந்தத் தொடரின் காலிறுதிப்போட்டியில் செவஸ்டோவா நடப்பு சாம்பியன் ஸ்வோவன் ஸ்டீபன்சை வீழ்த்தி அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார்.

கடந்த ஆண்டு செரீனாவுக்கு குழந்தை பிறந்து. மகப்பேறு முடிந்த சில மாதங்களிலே செரீனா களத்துக்கு திரும்பிவிட்டார். ஆனால், அவரது ஆட்டங்களில் முன்போல் அனல் பறக்கவில்லை. ஒவ்வொரு வெற்றிக்கும் கடுமையாக போராடிக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில்தான் பரபரப்பான அரையிறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய செரீனா முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

முதல் செட்டில் செவஸ்டோவா சற்று ஈடுகொடுத்து ஆடியதால் ஆட்டம் மூன்றாவது செட் வரை நகரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டாவது செட்டில் செரீனாவின் அதிரடியான ஆட்டத்தால் செவஸ்டோவா செய்வது அறியாமல் போனார்.

இரண்டாவது செட்டில் சற்றும் இரக்கம் கட்டாத செரீனா இந்த செட்டை 6-0 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதன்மூலம் 6-3, 6-0 என்ற நேர்செட்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...