7 மாத கர்ப்பிணியாக இருந்தாலும் டென்னிஸ் விளையாடுவேன்: சானியா மிர்சாவின் வைரல் வீடியோ

Report Print Vijay Amburore in ரெனிஸ்

7 மாத கர்ப்பிணியாக இருக்கும் சானியா மிர்சா டென்னிஸ் விளையாடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்துகொண்ட பின்னரும் கூட தொடர்ந்து இந்தியாவிற்காக விளையாடி வருகிறார்.

தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கு சானியாவிற்கு வரும் அக்டோபர் மாதம் குழந்தை பிறக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் அதற்கேற்ற ஓய்வு எதனையும் எடுக்காமல் பிடித்தமான, டென்னிஸ் விளையாட்டை தன்னுடைய சகோதரியுடன் சேர்ந்து விளையாடியுள்ளார்.

இதனை வீடியோவாக எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதிலிருந்து பலரும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

எதிர்வரும் 2020-ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளுக்காக, தான் இப்போதே தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...