இதற்கெல்லாம் இனவெறிதான் காரணம்: பிரபல டென்னிஸ் வீராங்கனையின் ஆதங்கம்

Report Print Balamanuvelan in ரெனிஸ்

என்னுடைய சக வீராங்கனைகள் அளவிற்கு நான் புகழ் பெற முடியாமல் போனதற்கு இனவெறிதான் காரணம் என்று கனடாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான Francoise Abanda தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் ட்விட்டர் பயனர் ஒருவர் நீங்கள் ஏன் உங்கள் சக வீராங்கனையான Eugenie Bouchard அளவிற்கு கவனம் பெறவில்லை என்று கேட்டிருந்தார்.

அவருக்கு பதிலளிக்கும் விதத்தில் Abanda, நான் என்றைக்குமே Bouchardஐப் போல் நடத்தப்பட மாட்டேன், ஏனென்றால் நான் கருப்பினப்பெண், அதுதான் உண்மை என்று தெரிவித்திருந்தார்.

டென்னிஸ் வீராங்கனைகளுக்கான தர வரிசை பட்டியலில் Abanda தற்போது 128 ஆவது இடத்தில் இருக்க Bouchard 169 ஆவது இடத்தில்தான் இருக்கிறார், என்றாலும் ஊடகங்களின் பார்வை எப்போதும் Bouchard மீதே இருக்கிறது.

2017 ஆம் ஆண்டில் 111 ஆவது இடத்திலிருந்தார் Abanda, ஆனால் 2014 ஆம் ஆண்டில் ஐந்தாவது இடத்திலிருந்தார் Bouchard.

ஐந்தாவது இடத்திலிருந்தவர் தற்போது 169 ஆவது இடத்திற்கு இறங்கினாலும் தனது சமூக ஊடக பங்கேற்பால் ஊடகங்களின் செல்லப்பிள்ளையாகவே தொடர்கிறார்.

பிப்வரியில் 24 வயதை எட்டிய Bouchard, இன்ஸ்டாகிராமை தனது கவர்ச்சிப்படங்களால் நிரப்பியதும், மேகன் மெர்க்கலின் தந்தை அவரது திருமணத்தில் பங்கேற்க மாட்டார் என்ற செய்தி வந்ததும், “எவ்வளவு டிராமா பண்ணுகிறார்கள்” என்று செய்தி வெளியிட்டதும் என எப்போதும் ஊடக வெளிச்சத்திலேயே இருந்தார். ஆனால் அவரைவிட மேலே இருக்கும் Abandaவைக் கண்டுகொள்வார் இல்லை.

இதற்கு காரணம் இனவெறிதான் என்று கூறும் Abanda, தான் ஏற்கனவே அனுபவப்பட்டதாகக் கூறுகிறார்.

ஒருமுறை டென்னிஸ் விளையாடும்போது தன்னை எதிர்த்து விளையாடிய ஒரு வீராங்கனை “ உன் நாட்டுக்குத் திரும்பிப்போ” என்று சத்தமிட்டதாக அவர் கூறுகிறார்.

ஏப்ரல் மாதம் விளையாடும்போது தலையில் அடிபட்டு கஷ்டப்பட்டபோது கூட ஊடகங்கள் தன்னை கண்டுகொள்ளவில்லை என்கிறார் அவர். Abandaவின் கருத்து கனடா நாடாளுமன்றத்திலும் புயலைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்