ஓய்வு பெறும் திட்டம் இல்லை: மரியா ஷரபோவா

Report Print Kabilan in ரெனிஸ்

டென்னிஸ் உலகின் பிரபல வீராங்கனையான மரியா ஷரபோவா, தற்போதைக்கு ஓய்வு பெறும் திட்டம் இல்லை என தெரிவித்துள்ளார்.

ரஷியாவைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. முன்னாள் No.1 வீராங்கனையான இவர், ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கினார்.

அதன் பிறகு, 15 மாத தடைக்கு பிறகு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மீண்டும் களம் இறங்கினார். ஆனால், அவரால் முன்பு போல பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து ஷரபோவாவின் ஆட்டம் சிறப்பாக இல்லை, எனவே அவர் ஓய்வு பெறக்கூடும் என தகவல் பரவியது. இந்நிலையில், இதுதொடர்பாக ஷரபோவா கூறுகையில்,

‘ஓய்வுக்கு என்று காலக்கெடு எதுவும் நான் நிர்ணயித்துக் கொள்ளவில்லை. ஓய்வு முடிவை எனது விருப்பத்தின் பேரிலேயே எடுப்பேன். அடுத்த ஒலிம்பிக் போட்டியில் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஆனால், அது நடக்குமா என்பது எனக்கு தெரியாது. தொடர்ந்து, எனது ஆட்டத்தில் கவனம் செலுத்த விரும்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Reuters

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...