இனிமேல் அழகுப்புயல் இவானோவிச் டென்னிஸ் விளையாட மாட்டார்!

Report Print Jubilee Jubilee in ரெனிஸ்

செர்பியா அழகுப் புயல் அனா இவானோவிச் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

உலகதர உயர்நிலைப் போட்டிகளில் தன்னால் இனி விளையாட முடியாது என்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவர் கடந்த 2008ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் சாம்பியன் பட்டம் பெற்று தரவரிசையில் முதலிடம் பெற்றார்.

இதன் மூலம் கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெறும் முதல் செர்பிய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

கடந்த 2015ம் ஆண்டு டென்னிஸில் அதிகம் பேர் ரசிக்கும் வீராங்கனை யார் என்று ஆங்கில பத்திரிகை ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் இவர் முதலிடத்தைப் பிடித்திருந்தார்.

முன்னணி வீராங்கனையாக வலம் வந்த இவானோவிச் சமீப காலமாக தொடர் தோல்விகளால் தரவரிசையில் பின் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

தற்போது ஓய்வை அறிவிப்பதை தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ள இவானோவிச், இது ஒரு கடினமான முடிவு என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments