தொழில்நுட்ப நிறுவனங்களின் வரிசையில் கூகுளிற்கு அடுத்ததாக காணப்படுவது பேஸ்புக் ஆகும்.
ஏறத்தாழ 2 பில்லியன் வரையான பயனர்களை உலகெங்கிலும் கொண்டுள்ள இதன் ஆண்டு வருமானமாது பல பில்லியன் டொலர்களை தாண்டும்.
இந்நிலையில் 2020 ஆம் நிதி ஆண்டிற்கான இந்தியாவில் பெறப்பட்ட வருமானம் தொடர்பிலான தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 43 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இந்திய பெறுமதியில் 1277.3 கோடிகள் அதிகரித்துள்ளது.
இதன்படி தேறிய வருமானமானது இரு மடங்கால் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தில் தேறிய வருமானமாக 65.3 கோடிகள் பெறப்பட்டிருந்த நிலையில், 2020 ஆம் நிதி ஆண்டில் 135.7 கோடிகள் பெறப்பட்டுள்ளது.