இந்த இணைய உலாவியில் Microsoft Teams வசதியை இனி பயன்படுத்த முடியாது

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்
49Shares

மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட வீடியோ கொன்பரன்ஸ் வசதியே Microsoft Teams ஆகும்.

இதனை அப்பிளிக்கேஷன்கள் ஊடாக மாத்திரமன்றி இணைய உலாவிகளிலும் பயன்படுத்த முடியும்.

இந்நிலையில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இணைய உலாவியான Internet Explorer 11 இல் இவ் வசதி நிறுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ் உலாவிக்கான சைபர் பாதுகாப்பு மற்றும் அப்டேட் என்பவற்றினை அந்நிறுவனம் ஏற்கணவே நிறுத்தியுள்ளது.

இதனையடுத்தே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் அண்மையில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட Microsoft Edge உலாவியில் Microsoft Edge வசதியினை பயன்படுத்த முடியும்.

அத்துடன் இவ் உலாவியில் குறித்த வசதியினை உயர் வேகத்துடன் பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்