புதிய சரித்திரம் படைத்தது SpaceX திட்டம்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்
82Shares

விண்வெளிக்கு செயற்கைக்கோள்கள் மற்றும் ரொக்கெட்டுக்களை அனுப்புவதற்காக Elon Musk என்பவரால் அறிமுகம் செய்யப்பட்ட திட்டமே SpaceX ஆகும்.

2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இத் திட்டமானது ஒரு தனியார் நிறுவனம் ஆகும்.

தற்போது இத் திட்டத்தின் உதவியுடன் நாசா விண்வெளி ஆய்வு மையமானது 4 விண்வெளி வீரர்களை பூமியின் ஒழுக்கில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெற்றிகரமாக அனுப்பி வைத்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை Falcon 9 எனும் ரொக்கெட் மூலம் நான்கு விண்வெளி வீரர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் Michael Hopkins, Victor Glover மற்றும் Shannon Walker எனும் மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்களும், Soichi Noguchi எனும் ஜப்பானைச் சேர்ந்த ஒரு விண்வெளி வீரரும் அடங்குகின்றனர்.

குறித்த ரொக்கெட் ஆனது உள்ளூர் நேரப்படி மாலை 7.27 மணியளவில் புளோரிடாவிலுள்ள கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து விண்ணில் பாய்ந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்