டிக் டாக் அப்பிளிக்கேஷனை விற்பனை செய்யும் முயற்சியை கைவிட்டது பைட் டான்ஸ்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

அமெரிக்காவில் தடையை எதிர்நோக்கியுள்ள டிக் டாக் அப்பிளிக்கேஷனை அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்கு விற்பனை செய்வதற்கு பைட் டான்ஸ் நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

எனினும் இந்த முயற்சிக்குரிய பலன்கள் எதுவும் கிடைக்காத நிலையில் அத் திட்டத்தினை கைவிட்டுள்ளது.

இதற்கு பதிலாக ஒராகிள் நிறுவனத்துடன் இணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளது.

கடந்த மாதம் டிக் டாக்கினை மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பணித்திருந்தார்.

இதற்கு இம் மாத முடிவு வரை கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது.

அவ்வாறு விற்பனை செய்யவில்லையாயின் டிக் டாக் நிறுவனம் மூடப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.

எனினும் இதற்கான முயற்சிகள் சாத்தியப்படாத நிலையிலேயே மேற்கண் முடிவினை பைட் டான்ஸ் நிறுவனம் எடுத்துள்ளது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்