சாம்சுங் நிறுவனத்திற்கு 1 பில்லியன் டொலர்கள் அபாரதம் செலுத்திய ஆப்பிள்: ஏன் தெரியுமா?

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்
137Shares

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களுக்கு தேவையான திரைகளின் ஒரு தொகுதியை சாம்சுங் நிறுவனத்திடமிருந்தே கொள்வனவு செய்துவருகின்றது.

இதேவேளை மற்றும் சில நிறுவனங்களுடன் திரையினை வடிவமைத்து வழங்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆப்பிள் நடாத்திவருகின்றது.

இப்படியிருக்கையில் ஆப்பிள் நிறுவனம் எதிர்பார்த்த அளவினை விடவும் குறைந்தளவு OLED திரைகளை கொள்வனவு செய்வதற்கு சாம்சுங் நிறுவனத்திற்கு 950 மில்லியன் டொலர்கள் செலுத்தியுள்ளது.

இந்த தகவலை Display Supply Chain Consultants (DSCC) தெரிவித்துள்ளது.

குறித்த தகவல் தொடர்பாக சாம்சுங் நிறுவனம் தனது ஆட்சேபனையை தெரிவித்துள்ளது.

இதனையடுத்தே சுமார் 1 பில்லியன் டொலர்களை சாம்சுங் நிறுவனத்திற்கு ஆப்பிள் அபராதமாக செலுத்தியுள்ளது.

இதேவேளை கடந்த சில மாதங்களாக காணப்படும் கொரோனா தாக்கம் காரணமாக உலகளவில் ஐபோன்களின் விற்பனையில் பாரிய வீழ்ச்சி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்