தானியங்கி முறையில் செயற்படும் இலத்திரனியல் குப்பைக் கூடை

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

நமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் பல பொருட்கள் இன்று தானியங்கி தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு வருகின்றன.

இதன் வரிசையில் தானியங்கி குப்பைக் கூடை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

Townew என அழைக்கப்படும் இக் குப்பைக்கூடையானது மனிதர்களின் நடமாட்டத்தினை உணர்ந்து செயற்படக்கூடியது.

அதாவது இதிலிருந்து 35 சென்ரி மீற்றர்கள் வரை மனித நடமாட்டம் இருக்கும்போது மூடி தானாக திறந்துகொள்கின்றது.

பின்னர் அவ்விடத்தை விட்டு விலகியதும் சில செக்கன்களின் பின்னர் தானாகவே மூடிக்கொள்கின்றது.

15.5 லீட்டர்கள் கொள்ளளவு கொண்ட இக் குப்பைக் கூடையானது Ifrared சென்சார் மூலம் மூலம் செயற்படுகின்றது.

இதில் 10 மணி நேரம் சார்ஜ் செய்த பின்னர் தொடர்ந்து ஒரு மாத காலத்திற்கு பயன்படுத்தக்கூடிய 2000mAh மின்கலமும் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...