கூகுளின் பரிசோதனை முயற்சியால் பல நிறுவனங்களும் பயனர்களும் பாதிப்பு

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

கூகுள் நிறுவனமானது புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்வதற்கான பரிசோதனை முயற்சிகளை கடந்த வாரம் ஆரம்பித்திருந்தது.

இதன் காரணமாக உலகளவில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பயனர்கள் பாதிக்கப்பட்டிருந்ததாக ZDNet நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இப் பாதிப்பு இரண்டு தினங்கள் வரை நீடித்திருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரோம் உலாவியினை அடிப்படையாக கொண்டு மேற்கொண்ட பரிசோதனையின்போது டேப்கள் கறுப்பு நிறத்திற்கு மாறியிருந்ததுடன், உள்ளடக்கங்கள் கட்புலனாகாது மறைந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் இப் பாதிப்பானது அனைத்து குரோம் உலாவி பயனர்களையும் பாதித்திருக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட பயனர்கள் இருப்பின் அவர்கள் குரோம் உலாவியில் பின்வரும் இரு அம்சங்களை Disable செய்யுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது.

  1. chrome://flags/#web-contents-occlusion
  2. chrome://flags/#calculate-native-win-occlusion

இவற்றினை தனித்தனியாக குரோம் உலாவியின் முகவரிப் பட்டையினுள் (Address Bar) உட்செலுத்தி Enter செய்வதன் மூலம் Disable செய்யும் வசதியினைப் பெற முடியும்.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்