இதயம் மற்றும் மூளையை படம்பிடிக்க மிகச்சிறிய இமேஜ் சென்சார் உருவாக்கம்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

மருத்துவ தொழில்நுட்ப வரலாற்றில் முதன் முறையாக மிகவும் நுண்ணிய இமேஜ் சென்சார் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது ஒருவரின் சுட்டுவிரலின் முனைப்பகுதியை விடவும் மிக மிக சிறியதாக காணப்படுகின்றது.

சுமார் 0.575 x 0.575 மில்லி மீற்றர் அளவு கொண்ட இந்த சென்சார் ஆனது கின்னஸ் சாதனையிலும் இடம்பிடித்துள்ளது.

OmnVision என அழைக்கப்படும் இதனைப் பயன்படுத்தி மனித இதயம் மற்றும் மூளையின் உட்பகுதிகளை படம் பிடிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

120 டிகிரி பார்வைக் கோணத்தைக் கொண்ட இக் கமெரா சென்சார் ஆனது 3 மில்லி மீற்றர்கள் தொடக்கம் 30 மில்லிமீற்றர்கள் குவியத்தூரத்தினை உடையதாகவும் காணப்படுகின்றது.

200x200 Pixel கொண்ட புகைப்படங்களை எடுக்கக்கூடியதாகவும், செக்கனுக்கு 30 பிரேம்கள் கொண்ட வீடியோக்களை பதிவு செய்யக்கூடியதாகவும் இருக்கின்றமை விசேட அம்சமாகும்.

gadgetsnow

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்