சுர்ஜித் உயிரிழப்பு எதிரொலி .... கண்டுபிடியுங்கள் பரிசு தருகிறோம் - அறிவித்த அரசு

Report Print Abisha in தொழில்நுட்பம்

சுர்ஜித் மரணத்திற்கு காரணமான ஆழ்துளை கிணற்றில் இருந்து குழந்தையை மீட்க கருவியை கண்டுபிடிபோருக்கு தமிழக அரசு பரிசு அறிவித்துள்ளது.

சுர்ஜித் மரணம் பலருக்கும் பாடம் சொல்லி சென்றுள்ளது. ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சுர்ஜித் நான்கு நாட்கள் போராட்டத்திற்கு பின் சடலமாக மீட்கப்பட்டார்.

முன்னதாக இதற்கு காரணம் அரசுதான் என்றும், குறிப்பாக இது போன்று ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க அரசு கருவி எதையும் கண்டறியவில்லை என்றும் பல விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில், தற்போது தமிழ்நாடு தொழில்நுட்ப பிரிவு தலைவர் சந்தோஷ் பாபு தனது முகநூல் பக்கத்தில் ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க பயன்படும் கருவியை கண்டறிபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

முகநூல் பதிவு

இந்த வருடம் தீபாவளி நமக்கு ஒரு துக்க நாளாக அமைந்துவிட்டது. சுஜீத்தின் இறப்பே கடைசியாக இருக்க வேண்டும். நமக்கு ஒரு அவசரமான தீர்வு தேவைப்படுகிறது. ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழும் குழந்தைகளை மீட்க நம்மிடம் சரியான கருவிகள் இல்லை என்பது குற்றவுணர்வாக இருக்கிறது. இனியாவது விழித்துக்கொள்வோம். ஆழ்துளைக் கிணற்றிலிருந்து குழந்தைகளை வெளியே எடுக்க சரியான சாதனம் கண்டுபிடித்துத் தருவோருக்கு, அதற்கான முறையான ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள், தனிநபர்களுக்கு ரூபாய் 5 லட்சம் சன்மானம் வழங்கப்படும்''

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்