கிளிப் கமெரா விற்பனையை அதிரடியாக நிறுத்தும் கூகுள்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

கூகுள் நிறுவனம் தான் உருவாக்கிய அணியக்கூடிய கிளிப் கமெராக்களின் விற்பனையை இந்த வாரத்திலிருந்து நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

இக் கமெராவானது கடந்த 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இதனை பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும், அவர்களை வீடியோ பதிவு செய்யும் செயற்பாடுகளில் ஈடுபட வைப்பதற்காகவும் கூகுள் நிறுவனம் உருவாக்கியிருந்தது.

இதில் சூழலின் வெளிச்ச அளவு போன்றவற்றினை இனங்கண்டு தானாகவே புகைப்படங்களை எடுத்தல் போன்றவற்றிற்காக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமும் உள்ளடக்கப்பட்டிருந்தது.

இது தவிர கூகுள் பிக்சலுடன் வரையறையின்றிய சேமிப்பு வசதி, நேரடியாகவே கைப்பேசிகளுக்கு அனுப்பக்கூடிய வசதி, தரவேற்றம் மற்றும் பகிர்தல் என்பன இலகுபடுத்தப்பட்டிருத்தல் போன்ற வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்