தனது பழைய மொபைல் சாதனங்களுக்கான iOS அப்டேட்டினை வெளியிட்டது ஆப்பிள் : காரணம் இதுதான்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்
69Shares

தொழில்நுட்ப நிறுவனங்கள் பொதுவாக தமது பழைய சாதனங்களுக்காக எந்தவொரு அப்டேட்டினையும் வெளிவிடுவதில்லை.

ஆனால் இதற்கு மாறாக ஆப்பிள் நிறுவனம் தனது பழைய மொபைல் சாதனங்களுக்காக புதிய iOS அப்டேட் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இந்த அப்டேட் ஆனது 2012 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட iPhone, iPad என்பவற்றிற்காகவே வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சரியான நேரம், திகதி மற்றும் அமைவிடம் (Location) என்பவற்றினை குறித்த சாதனங்களில் GPS தொழில்நுட்பத்தியின் உதவியுடன் காண்பிக்க முடியும்.

2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கணனியில் ஏற்பட்ட Millennium அல்லது Y2K கோளாறை போன்ற ஆப்பிளிகேஷன் பழைய மொபைல் சாதனங்களிலும் கோளாறு தோன்றியதை அடுத்தே ஆப்பிள் நிறுவனம் அதனை சரி செய்து புதிய அப்டேட்டினை வெளியிட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்