சவுதி அரேபியாவில் உருவாக்கப்படும் ஹைப்பர்லூப் அதிவேக ரயில் பாதை

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

ஹைப்பர்லூப் என்பது மிகவும் வேகமாக பயணிக்கக்கூடிய ரயில் தொழில்நுட்பமாகும்.

இது தற்போது பாவனையில் உள்ள ரயில்களை விடவும் 10 மடங்கு வேகமாக பயணிக்கக்கூடியது.

இத் தொழில்நுட்பம் கடந்த சில வருடங்களாக பரீட்சிக்கப்பட்டு வந்தது.

இது வெற்றியளித்ததன் காரணமாக சில நாடுகளில் ஹைப்பர்லூப் தொழில்நுட்ப ரயில்களை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நாடுகளின் வரிசையில் தற்போது சவுதி அரேபியாவும் இணைந்துள்ளது.

இதன்படி சவுதி அரேபியாவின் ஜித்தாவின் வட பகுதியில் முதற்கட்டமாக 35 கிலோ மீற்றர்கள் நீளமான ஹைப்பர்லூப் ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது.

தற்போது ரியாத்திலிருந்து ஜித்தாவிற்கு செல்வதற்கு சுமார் 10 மணி நேரங்கள் செலவாகின்றது.

எனினும் ஹைப்பர்லூப் தொழில்நுட்ப ரயில் அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர் 76 நிமிடங்களில் குறித்த பயணத்தை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்