மாணவர்களுக்காக கைகோர்க்கும் நாசா மற்றும் மைக்ரோசொப்ட்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

விண்வெளி தொடர்பான பாடங்களை விரும்பி படிக்கும் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் நாசா விண்வெளி ஆய்வு மையம் மற்றும் மைக்ரோசொப்ட் நிறுவனம் இணைந்து புதிய திட்டம் ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளன.

இதன்படி ஒன்லைன் பாடத்திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதில் 8 பாடங்கள் உள்ளடக்கப்படவுள்ளன.

இவை அனைத்தும் முப்பரிமாண தொழில்நுட்பம் மற்றும் மாயத் தோற்ற தொழில்நுட்பம் என்பவற்றினையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

மேலும் சில பாடங்கள் 50 நிமிடங்கள் வரை இருக்கும், இதற்காக ஒவ்வொரு மாணவர்களிடமிருந்தும் 2 டொலர்கள் தொடக்கம் 3 டொலர்கள் வரைக்கும் அளவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers