விற்பனைக்கு வந்துவிட்டது 1TB microSD கார்ட்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

ஸ்மார்ட் கைப்பேசிகள், டேப்லட்கள் மற்றும் கமெராக்கள் என்பவற்றில் பயன்படுத்தக்கூடிய microSD கார்ட்களை வடிவமைக்கும் பிரபல நிறுவனங்களுள் ஒன்றாக SanDisk விளங்குகின்றது.

இந்த நிறுவனம் தற்போது 1TB கொள்ளளவுடைய microSD கார்ட்டினை முதன் முறையாக அறிமுகம் செய்துள்ளது.

இதனை அமேஷான் தளத்தின் ஊடாக கொள்வனவு செய்யக்கூடியதாகவும் இருக்கின்றது.

எனினும் தற்போது ஸ்பெயின், ஜேர்மனி மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றில் உள்வர்களால் மாத்திரமே கொள்வனவு செய்ய முடியும்.

இதன் விலையானது 449.99 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

இதேவேளை இச் சாதனமானது 160MB/s எனும் வேகத்தில் தரவுகளை வாசிப்பதுடன், 90MB/s எனும் வேகத்தில் தரவுகளை பதிக்கக்கூடியதாகவும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers