வயர்லெஸ் 5G வலையமைப்பினை உருவாக்கும் சாம்சுங்: எங்கு தெரியுமா?

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

தொழில்நுட்ப உலகில் இன்று அதிகம் பேசுபொருளாக காணப்படுவது 5G மொபைல் வலையமைப்பு தொழில்நுட்பமாகும்.

இத் தொழில்நுட்பத்தினைக் கொண்ட கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்பட்டு வரும் அதேவேளை, 5G தொழில்நுட்பம் கொண்ட மொபைல் வலையமைப்பும் அறிமுகம் செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் சாம்சுங் நிறுவனம் முதன் முதலாக இத் தொழில்நுட்பத்தினை வயர்லெஸ் முறையில் பயன்படுத்தக்கூடிய வகையில் அறிமுகம் செய்யவுள்ளது.

இவ் வசதி முதலில் இத்தாலியின் மிலன் நகரில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அடுத்த 5 மாத்தில் இப் பரீட்சார்த்த தொழில்நுட்பத்தினை மக்கள் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மிக வேகமான இணைய இணைப்பினை பெற்றுக்கொள்ள முடியும்.

கடந்த வருடம் 5G தொழில்நுட்பம் பரீட்சிக்கப்பட்ட போது 1 Gbps எனும் வேகத்தில் தகவல் பரிமாற்றம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்