சாம்சுங் நிறுவனமானது மிகவும் துல்லியம் கூடிய 8K QLED தொழில்நுட்பத்தினைக் கொண்ட தொலைக்காட்சியினை அறிமுகம் செய்யவுள்ளது.
முதன் முறையாக அமெரிக்காவில் விற்பனைக்காக இத் தொலைக்காட்சி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி முதல் விற்பனைக்கு வரவுள்ள இத் தொலைக்காட்சியின் விலையானது 14,999 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
85 அங்கு அளவுடைய தொலைக்காட்சிக்கே மேற்கண்ட விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனினும் 65 அங்குல அளவுடைய தொலைக்காட்சி 4,999 அமெரிக்க டொலர்கள் எனவும், 75 அங்குல அளவுடைய தொலைக்காட்சியின் விலை 6,999 அமெரிக்க டொலர்கள் எனவும், 82 அங்குல அளவுடைய தொலைக்காட்சியின் விலை 9,999 டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.