வட துருவத்தில் ஆய்வுக்கூடம் அமைக்க இஸ்ரோ புதிய திட்டம்

Report Print Jayapradha in தொழில்நுட்பம்

இஸ்ரோ பேரிடர் மேலாண்மைக்கு பெரிதும் பயன்படும் வகையில் வட துருவத்தில் தனது முதல் அயல்நாட்டு ஆய்வுக்கூட்டத்தை அமைக்க உள்ளது.

இந்திய ரிமோட் சென்சிங் (Indian Remote Sensing) செயல்பாடுகளை இதன் மூலம் அதிகப்படுத்த முடியும் என்று இஸ்ரோ கருதுகிறது.

பல்வேறு செயற்கைக் கோள்களின் தகவல்களைப் பெற்று செயல்படும் தேசிய ரிமோட் சென்சிங் மையம் ஏற்கெனவே ஹைதராபாத்தில் உள்ளது. இது பேரிடர் காலங்களில் மிகவும் பயனளிப்பதாக உள்ளது.

இது பற்றி இஸ்ரோ அதிகாரி ஒருவர் கூறுகையில் வட துருவ ஆய்வுக்கூடத்தை அமைப்பதிற்கு இஸ்ரோ முனைப்புடன் உள்ளது.

வட துருவத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்வதுசர்வதேச அமைப்புகளின் ஒப்புதல் மற்றும் ஒத்துழைப்பைப் பெறுவது போன்றவற்றால் இத்திட்டம் நிறைவேற தாமதமாகலாம். ஆனால் உறுதியாக இத்திட்டம் நிறைவேறும் எனக் குறிப்பிட்டார்.

தென் துருவத்தைக் காட்டிலும் வட துருவத்தில் இந்த மையத்தை நிறுவுவது அங்கு நிலவும் சூழ்நிலை காரணமாக கடினமானதாக இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers