இன்ஸ்டாகிராமில் மற்றுமொரு புதிய வசதி விரைவில்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

அண்மைக்காலமாக இன்ஸ்டாகிரமானது பல்வேறு புதிய வசதிகளை அடுத்தடுத்து அறிமுகம் செய்து வருகின்றது.

இவற்றின் தொடர்ச்சியாக மற்றுமொரு வசதியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது பயனர் ஒருவர் தான் இன்ஸ்டாகிராம் அப்பிளிக்கேஷனை எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றார் என்பதனை அறிந்துகொள்ள முடியும்.

இப் புதிய வசதியினை Jane Manchun Wong எனும் அப்பிளிக்கேஷன் ஆய்வாளர் உருவாக்கியுள்ளார்.

இந்த தகவலை இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான Kevin Systrom தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers